2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ போராட்டம்’

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெய்ப்பூர்:

குடிபோதையில் காரைச் செலுத்தி  பிடிபட்ட உறவினரை விடுவிக்கக் கோரி, பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., கணவருடன்   போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜோத்பூர் மாவட்டம், ஷேர்கார்க் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் மீனா குன்வர். இவரது கணவர் உமைத் சிங். சமீபத்தில், மீனா குன்வரின் உறவினர் குடிபோதையில் காரைச் செலுத்திச் சென்று பொலிஸிடம் சிக்கினார். அவரை கைது செய்த பொலிஸார், காரையும் பறிமுதல் செய்தனர்.

 

இது குறித்த தகவல் அறிந்த எம்.எல்.ஏ., மீனா குன்வர், கணவர் உமைத் சிங்குடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்தார். உறவினரை உடனடியாக விடுவிக்கும்படி பொலிஸாரை  மிரட்டினார். பொலிஸார் மறுத்தனர்.'இந்த காலத்தில் குழந்தைகள் கூட குடிக்கின்றனர். என் உறவினர் இளைஞர். போதையில் காரைச் செலுத்திச் சென்றது பெரிய தவறில்லை. அவரை விடுவிக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., தகராறு செய்தார்.

பொலிஸார் மறுக்கவே, பெலிஸ் நிலையத்துக்கு கணவருடன் வந்து எம்.எல்.ஏ., தர்ணாவில் ஈடுபட்டார். அவரது கணவரும் பொலிஸாரை தரக்குறைவாக பேசினார். இதன்பின், காரை மட்டும் பொலிஸார் விடுவித்தனர். இதையடுத்து, அந்த காரிலேயே எம்.எல்.ஏ., கிளம்பிச் சென்றார். குடிபோதையில் சிக்கிய உறவினரை விடுவிக்கக் கோரி, எம்.எல்.ஏ., போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .