Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 23 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெய்ப்பூர் :
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கள்ளக் காதலனின் மர்ம உறுப்பை துண்டித்த பெண்ணை, பொலிஸார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சேர்ந்த 28 வயதான வாலிபர், யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளனுக்கும் சமூக வலைதளம் ஊடாக நட்பு ஏற்பட்டது. பின், இருவரும் நேரிடையாக சந்தித்தனர்; நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி தன்னுடைய வீட்டுக்கு வரும்படி வாலிபருக்கு குறித்த பெண் அழைப்பு விடுத்தார். இதையேற்று வீட்டுக்கு வாலிபரும் வந்தார். இருவரும் உணவு சாப்பிட்டனர். பின், வாலிபருடன் அவரது வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவில் கடும் வலியால் அவதிப்பட்ட வாலிபர் எழுந்து பார்த்த போது, அவரது மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு இரத்தம் கொட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு காதலி இல்லை. உடனடியாக தொடர்பு கொண்டு, வாலிபர் தன் நிலையை கூறியுள்ளார். இதைக் கேட்டு வீட்டுக்கு வந்த குறித்த பெண், வாலிபரை ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
மூன்று நாள் சிகிச்சைக்கு பின், வாலிபர் கடந்த 19ஆம் திகதி, வீட்டுக்குச் சென்றார். இதன்பின், காதலி மீது வாலிபர் பொலிஸில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து, காதலியை பொலிஸார் தேடி வருகின்றனர். இது பற்றி பொலிஸார் தொடர்ந்து கூறியதாவது:
வாலிபரும், அந்தப் பெண்ணும் மிகவும் நெருங்கி பழகி வந்துஉள்ளனர். வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள, காதலனை வற்புறுத்தியுள்ளார். வாலிபர் மறுக்கவே, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரது மர்ம உறுப்பை துண்டித்தது தெரிய வந்துள்ளது.
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago