2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காதலால் இணைந்த ஜோடி மதத்தால் பிரிந்தது ; பிரபல ஐஏஎஸ் காதல் ஜோடியின் கதை

Editorial   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

திரைப்படங்களில்தான் இவ்வாறான கதைகளை பார்த்திருப்போம், ஆனால் நிஜவாழ்க்கையிலும் இதேபோன்ற சம்பவங்கள் இக்காலத்திலும் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைக்கையில் மனது கொஞ்சம் சங்கடப்பட்டுவிடுகின்றது.

சாதாரண ஜோடியாயின் இக்கதைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்திருக்குமோ என்பது தெரியாது. சிலவேளைகளில் ஒரு செய்தியாகக்கூட வெளிவந்திருப்பதற்கு சாத்தியமில்லை. ஆனால். இது பிரபல ஐஏஎஸ் ஜோடியாகும்.

அந்த ஜோடியின் திருமணத்துக்கு அரசியல் பெருந்தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமன்றி, நேரடியாகவும் சென்று வாழ்த்துமழைகளை பொழிந்திருந்தனர்.

அந்த ஜோடிதான் “டீனா டாபி- அதார் அமீர் கான்” ஜோடியாகும்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில், ​  டீனா டாபி முதலிடம் பெற்றார். தனது முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றார். அதுமட்டுமன்றி,  ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற   பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்ட பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

அதே தேர்வில் தோற்றியிருந்த அதார் அமீர் கான் இரண்டாவது இடம் பெற்றார். அவர், காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இருவருக்கும்,  முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியளிக்கப்பட்டது. அங்கு இருவரும் காதல் மலர்ந்தது.

அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதே இவர்கள் மீது தேசிய அளவில் கவனம் பெற்றது.

இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் எதிராக குரல் எழும்பியது. இந்து மகாஜன் சபா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது.

அத்தனை எதிர்ப்புக் குரல்களையும் புறந்தள்ளி இந்த ஜோடி கடந்த 2018ல் கரம் பிடித்தன. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய மந்திரிகள், மக்களவையின் அப்போதைய  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், டீனா டாபி, அதார் அமீர் கான் திருமணம் மத வெறுப்புகளும், சகிப்பினமையும் அதிகரித்து வரும் காலத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறி இருந்தார்.

ஆனால், இந்தத் தம்பதி கடந்த நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இருவரும் மனமுவந்து ஒருமித்து விவாகரத்து கோரியதால் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

சாதி, மத எதிர்ப்பு என எதுவும் அசைக்காத காதல், திருமணத்தில் முடிந்து பின்னர் எதனால் முறிந்தது என்ற காரணம் வெளியாகவில்லை.

இவர்கள் திருமண முறிவுக்கு சமூக வலைதலத்தில் பலரும்  வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டீனா டாபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

 "நீங்கள் என்ன செய்தாலும் யாரேனும் சிலர் உங்களைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயங்களையும் செய்யுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்

https://www.indiatoday.in/india/video/ias-toppers-athar-khan-and-tina-dabi-tie-the-knot-in-kashmir-s-pahalgam-1207985-2018-04-09?jwsource=cl

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X