A.K.M. Ramzy / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை,
மும்பை கார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் புத்தாண்டு தினத்தன்று நடந்த கொண்டாட்டத்துக்காக ஜான்வி (வயது19) என்ற இளம்பெண் வந்தார். கொண்டாட்டத்தின்போது நடந்த தகராறில் ஜான்வி தடுமாறி மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜான்வியின் 22 வயது காதலரும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்தது.
ஜான்வி அங்கு வந்த போது அவரது காதலர், 19 வயது இளம்பெண்ணுடன் நெருக்கமாக பேசி கொண்டிரு ந்ததை கண்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்வி காதலர் மற்றும் இளம்பெண்ணுடன் சண்டை போட்டு உள்ளார். இந்த நிலையில் ஜான்வி கட்டிடத்தின் தரை தளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் பொலிஸார் தோண்டி தோண்டி நடத்திய தீவிர விசாரணையில், ஜான்வியை கொலை செய்ததாக அவரது காதலன் மற்றும் இளம்பெண்ணை கைது செய்தனர்.
கொலையான ஜான்வி கல்லூரி மாணவி என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. கல்லூரி மாணவியை கொலை செய்ததாக அவரது காதலன் மற்றும் இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026