Ilango Bharathy / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபர் ஒருவர் தனது காதலியின் 13 வயதான மகளை நான்காவதாகத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
பஸ் நடத்துனராக பணிபுரிந்து வரும் இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகளின் தாயான பரமேஸ்வரி என்பவருடன் காதல் ஏற்பட்டதாகவும், கிருஷ்ணன் மீது கொண்ட அதீத காதலால் அவருக்கு குழந்தை யொன்றை பெற்றுக்கொடுக்க நினைத்த பரமேஸ்வரி தனது 13 வயதான மகளை திருமணம் செய்துவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருமணம் நடந்த அன்றே ராதாகிருஷ்ணன் சிறுமியை வற்புறுத்தி உறவு கொண்டதாகவும், இதனால் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாகவும், தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வளரான கார்த்திகேயன் என்பவர் ராதாகிருஷ்ணன் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள பொலிஸார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரியையும் கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026