Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலியின் மார்பே, காதலனுக்கும் காதலுக்கும் வினையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28- வயதுடைய வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணொருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ். சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவ்வழியாக சென்ற கல்லூரி மாணவிக்கும் வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் காதலிக்க தொடங்கியுள்ளனர், வாலிபர் மாணவியை கண்மூடித்தனமாக காதலித்துள்ளார்.
மாணவி எங்கு சென்றாலும் பின்தொடர்வது, மேலும் நான் உயிர் வாழ்வதே உனக்காக தான் என பல்வேறு வசனங்களை பேசி உள்ளார்.
ஒரு கட்டத்தில், மாணவி தன்னை உண்மையாக காதலிக்கிறாரா? என தெரிந்து கொள்ள விரும்பிய வாலிபர், மாணவியின் மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த வற்புறுத்தியுள்ளார்.
வாலிபரின் காதல் லீலை அத்துமீறி செல்வதை பார்த்த மாணவி பயந்து அரண்டு போய் உள்ளார். இது குறித்து தனது வீட்டில் கூறியுள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, மார்த்தாண்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். இதனால் உஷாரான பொலிஸார் வாலிபரை அலேக்காக தூக்கி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இளைஞனிடம் விசாரித்தபோது, தான் மாணவியை காதலிப்பதாகவும் அவள் தனக்கு வேண்டும் எனவும் கூறிவருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 minute ago
11 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
11 minute ago