2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

காதலை கெடுத்த அக்காவை கொலை செய்து தீவைத்து எரித்த தங்கை

Editorial   / 2021 டிசெம்பர் 31 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூணாறு:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தன், இவர் மனைவி ஜிஜி, இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர், மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து(22).

கடந்த 21ஆம் திகதி சிவானந்தன், அவர் மனைவி இருவரும் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர், இளைய மகள் ஜித்துவிற்கு,உடல்நிலை பாதிப்பு உள்ளதால் வீட்டில் உள்ள அறையில் அவர் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு தாய் தந்தையர் இருவரும் வெளியில் சென்றிருந்தனர்.

மூத்தமகள் விஸ்மயா தங்கையை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது, வீட்டுக்குள் மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இளைய மகள் ஜித்து வீட்டுக்குள் இல்லாததை ,கண்டு உடனே இது குறித்து பொலிஸில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் பரவூர் பொலிஸ் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து ஜித்துவை தேடி வந்தனர், பொலிஸ் தேடுதலின் போது பரவூர் அடுத்துள்ள காக்க நாடு நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ஜித்துவை பரவூர் பொலிஸார் நேற்று (30) கண்டுபிடித்தனர்.

 பொலிஸிடம் பிடிபட்ட ஜித்துவிடம், நடத்திய விசாரணையில்  வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன், அப்போது எனது கைகள் கட்டுகளை அவிழ்த்து விடுமாறு அக்காவிடம் கூறினேன், அக்கா விஸ்மயா கை கட்டுகளை அவிழ்த்து விட்டார்.

அப்போது எனது காதலை அக்கா கெடுத்து விட்டதாக கூறி அக்காவிடம் சண்டை போட்டேன், அவளும் என்னிடம் சண்டை போட்டார், ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அக்கா உடலில் சரமாரியாக குத்தினேன், இதில் சம்பவ இடத்தில் அக்கா இறந்து விட்டார். அக்கா இறந்தது தெரிந்தவுடன் அவர் உடலில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்து எரித்தேன். உடல் முற்றிலும் தீயில் கருகிய பின்பு வீட்டை விட்டு வெளியேறினேன், இவ்வாறு கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .