2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

காரில் செல்வோருக்குப் புதிய சலுகை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாக கொரோனாத் தொற்றுப் பரவலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாக்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக, பாடசாலைகளிலும்  நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது  உள்ளிட்ட கட்டுப்பாடுகளை க் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படாது எனவும், பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2000 ரூபாயிலிருந்து  500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X