2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

காரை விட்டு இறங்கி கதறி அழுத காதல் தம்பதி; திரைப்படப் பாணியில் சம்பவம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடுவீதியில் திடீரென காரில் இருந்து இறங்கிய இளம் காதல் தம்பதியொன்று, தங்களைக்  காப்பாற்றும்படி கதறி அழுத சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது.

கோவை-அவினாசி பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு(02) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த வீதியில் வாகன நெரிசலில் காத்திருந்த காரொன்றிலிருந்து திடீரெனக் கதவுகளைத் திறந்து வெளியே ஓடிய குறித்த தம்பதி வீதியில் அமர்ந்து கொண்டு ”எங்களைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... ”எனக் கதறி அழுததாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அப்பகுதில்  கூட்டம் கூடவே அங்கு வந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவர் இது குறித்து விசாரணை செய்துள்ளார்.

இதன்போது குறித்த தம்பதி அவர்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் எங்களை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணின் தந்தை காரில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னரே தாம்  தேனிக்குக் கடத்திச் செல்லப்படுவதை உணர்ந்ததாகவும்” இதனால் எங்களைப் பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில்  சிக்னலில் கார் நின்றதும், தப்பிக்க முயன்றதாகக்  கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த தம்பதியின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து பொலிஸார் சமரசம் செய்துவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .