Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 28 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் துது நகரிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 2 கர்ப்பிணிகள், 27 நாட்களேயான சிசு மற்றும் குழந்தை உட்பட ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிணற்றில் சடலங்கள் மிதப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலங்களை மீட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்கள் காலு தேவி, மம்தா மற்றும் கம்லேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காலு தேவியின் 4 வயது குழந்தை மற்றும் பிறந்து 27 நாட்களேயான சிசு ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களில் மம்தா தேவி மற்றும் கம்லேஷ் ஆகிய இருவரும் நிறைமாத கர்ப்பிணிகள் என்றும் தெரிய வந்துள்ளது.
அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கிணறு, அவர்களுடைய வீடுகளில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு அவர்களது உறவினர்கள் கொலை செய்திருக்க கூடும் என குற்றம் சாட்டப்படும் நிலையில், கடந்த புதன்கிழமையே அவர்கள் 5 பேரும் காணவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், இன்று வரை அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலு தேவியை அவர்களது உறவினர்கள் தாக்கியதில் கண்ணில் காயமடைந்த அவர் 15 நாட்கள் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சமீபத்திலேயே அவர் வீடு திரும்பியதாக என உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார்.
கர்ப்பிணியான 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .