A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலூர்
திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் திகதி இனி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்றுஇரவு நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் எப்போதும் திறந்த டெண்டர்தான் விடப்படும். இ-டெண்டர் என்பதால் வீட்டில் இருந்தே டெண்டர் போடலாம். இதை யாரும் மறைக்க முடியாது. ஊழல் செய்ய முடியாது.
திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறையில் டெண்டர் விட்டார்கள். புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.210 கோடியில் டெண்டர் விட்டு ரூ.430 கோடிக்குப் பணம் பட்டுவாடா செய்தார்கள். அதுதான் ஊழல். இந்த வழக்கிற்குத்தான் ஸ்டாலின் தடையாணை வாங்கியு ள்ளார். எங்களுக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயமில்லை. எங்கே அழைத்தாலும் நான் வரத் தயார்.
மக்களைக் குழப்பி ஆதாயம் தேடி வெற்றிபெற முடியாது. ஸ்டாலின் நேர்வழி சென்றால் எதிர்க்கட்சியாது மிஞ்சும். மக்களை ஏமாற்றி நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். எல்லாவற்றிலும் மறைத்து எதையும் செய்ய முடியாது.இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago