A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலூர்
கிருபானந்த வாரியார் இறந்தபோது மரியாதை செலுத் தாத அதிமுகவினர், அவருக்கு அரசு விழா என்று அறிவித்தால் மக்கள் ஏமாந்து ஓட்டு போடுவார்கள் என நினைப்பதாகத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் காட்பாடி தொகுதி வடக்கு திமுக தேர்தல் பணிக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
''கிருபானந்த வாரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போதுதான் முதல்வருக்கு யாரோ ஒருவர் சொல்லி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
கிருபானந்த வாரியார் மறைந்தபோது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் வந்ததும் திமுக தலைவர் கருணாநிதி சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் ‘ஞானப்பழம் ஒன்று முதிர்ந்து, உதிர்ந்து விட்டது’ என்று அறிக்கை வெளியிட்டார்.அப்போது, நான் எம்எல்ஏ இல்லை. என்னை அழைத்த தலைவர் கருணாநிதி, காங்கேயநல்லூரில் வாரியாரின் உடல் அடக்கம் செய்வதால் உடன் இருக்கும்படி தெரிவித்தார்.
காங்கேயநல்லூரில் வாரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முக்கியமான நபர்கள் என்றால் அது குமரிஅனந்தன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம்தான். அடுத்தது நான். வாரியார் உடலுக்கு அதிமுக சார்பில் சென்னையிலும், வேலூரிலும் யாரும் வந்து மரியாதை செலுத்தவில்லை. அப்போது, காட்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவரோ ஏன் ஒரு அதிமுக பிரமுகர் கூட வாரியார் உடலுக்கு மரியாதை செலுத்தவில்லை.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago