Editorial / 2021 மார்ச் 22 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழிந்த 'ஜீன்ஸ்' குறித்து, சர்ச்சைக்குரிய கருத்துj; தெரிவித்த, உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத், நேற்று (21) தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரினார்.
சமீபத்தில், முதலமைச்சர் தீரத் சிங் ராவத் விமான பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பெண், கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருந்தார். அவருடன் இரண்டு குழந்தைகளும் பயணம் செய்தனர். “இது போன்ற உடைகளை அணிந்து, அவர், மற்றவர்களுக்கு எப்படி முன்னுதாரணமாக திகழ முடியும்” என்று அங்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு, பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், “கிழிந்த ஜீன்ஸ் குறித்து, நான் முன்வைத்த கருத்து, யாரையேனும் பாதித்திருந்தால், அதற்குமன்னிப்பு கேட்கிறேன். ஆனால், சாதாரண ஜீன்ஸில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கிழிந்த ஜீன்ஸ் அணிவதை மட்டும் ஏற்க முடியாது. குழந்தைகளுக்கு நாம், நன்மதிப்புகளைக் கற்றுக்கொடுத்து, ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்” என்று அவர் மன்னிப்புக் கேட்கும்போது கூறினார்.
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago