2025 ஜூலை 16, புதன்கிழமை

குடிமகன்களின் பார் ஆக மாறுகிறது

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நெல்லை நகரில் பரந்து விரிந்து கடல்போல் நயினார்குளம் காணப்படுகிறது. இக்குளத்துக்கு நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. நயினார்குளத்தின் தண்ணீர் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நயினார்குளத்தை சுற்றிலும் கரைகளை சீரமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும், மாலை நேரத்தில் பொதுமக்கள் அமர்ந்து குளத்தின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. குளத்தின் தெற்குபகுதி கரையில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் குளத்தை சுற்றிலும் மறைவான இடத்திலும், குளத்தின் பாதுகாப்பு சுவர் பகுதியிலும் பகல், இரவு நேரங்களில் குடிமகன்கள் மதுக்குடிக்கும் பாராக மாற்றி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X