2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

குடியரசுத் தலைவருடன் ஆளுநர் புரோஹித் சந்திப்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 06 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.

முன்னதாக, மூன்று நாள் அரசுப் பயணமாக டில்லி சென்றுள்ள தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்துப் பேசிய ஆளுநர், இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்து பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .