2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’குடும்பம், மதம் இல்லாததே எனது ஆட்சியே’

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரத்

அரச குடும்பம், சாதி பின்னணி என எதுவுமே இல்லாமல் நாட்டை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் புறநகர் பகுதியில் காணொளி மூலம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் விடுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் பொதுமக்களில் ஒருவனாக இருந்தேன். அதாவது எனக்குஅரசியல் அல்லது அரச குடும்பத்து பின்னணியோ சாதி ரீதியான அரசியல் ஆதரவோ இல்லை. ஆனாலும் உங்களின் (பொதுமக்கள்) ஆசிதான் 2001ஆம் ஆண்டு குஜராத்துக்கு சேவை புரிவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது. இந்த ஆசி தொடர்வதால் 20 ஆண்டுகளைக் கடந்தும் நாட்டு மக்களுக்கு நான் சேவை செய்து வருகிறேன். முதலில் குஜராத்துக்கு சேவையாற்றிய நான் இப்போது நாடு முழுவதற்கும் சேவை செய்கிறேன்.

சாதியும் மத நம்பிக்கைகளும் நமக்கு தடையை ஏற்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது என சர்தார் வல்லபபாய் படேல் கூறியுள்ளார். நாம் அனைவரும் இந்தியாவின் மகன், மகள்கள். நாம் நாட்டைநேசிக்க வேண்டும். படேலின் கொள்கைகளை வலுப்படுத்துவதில் குஜராத் மக்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .