2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

குட்டிக்கரணம் அடித்து கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 16 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

குட்டிக் கரம் அடித்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியைத் தலைமை இடமாக கொண்டு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உள்ளடங்கிய  புதிய மாவட்டமொன்றை அமைக்க வேண்டும் எனவும், இளையரசனேந்தல் குறுவட்டத்தினை தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும் என்பதையும்  வலியுறுத்தி சாங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்  குட்டி கரணம் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .