Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவின் போது, 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாச தீட்சை எடுத்துள்ளனர்.
கும்பமேளா நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டுள்ளனர்.
மேலும் அங்குள்ள கும்பமேளா நிகழ்வின் போது ஏராளமான இளம் பெண்கள் துறவரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இதுவரை 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளனர்.
“சந்நியாச தீட்சை எடுத்து துறவறம் மேற்கொண்ட பெண்கள் சனாதனத்துக்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். துறவறம் பூண்ட பெண்கள் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள் ஆவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .