2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

’குரங்குகளும் கூட வெற்றி நாயகர்கள்’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியபோது, குரங்குகளை பிடித்து வந்து சோதனை நடத்திய சுவாரசிய தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா எழுதிய புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

உலக மக்கள் தொகையில் 2ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, இவ்வளவு மக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசிக்கு எங்கே போவது என்ற கேள்வி உலகமெங்கும் எழுந்தது.

ஆனால் உள்நாட்டில் ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி சாதித்தது. இதன் சாதனைப் பயணம் பல கடிமான பாதைகளைக் கடந்து வந்துள்ளது.

இந்த அனுபவங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டொக்டர் பலராம் பார்கவா, ‘கோயிங் வைரல்: மேக்கிங் ஆப் கோவேக்சின்- தி இன்சைடு ஸ்டோரி’ என்ற தலைப்பில் புதிய புத்தகமாக எழுதி உள்ளார்.

 அதில் விஞ்ஞானிகள் சந்தித்த அறிவியல் நுட்பங்கள், சவால்கள், ஆய்வக வலையமைப்பு, நோய்க்குறி அறிதல், சிகிச்சை, செரோ சர்வேக்கள், புதிய தொழில்நுட்பங்கள் என பல விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

கோவேக்சின் தடுப்பூசியின் வெற்றி நாயகர்கள் என்று சொன்னால், மனிதர்கள் மட்டுமல்ல, 20 குரங்குகளும் அடங்கும் என்று டாக்டர் பலராம் பார்கவா சொல்கிறார்.

இதுபற்றி அவர் புத்தகத்தில் எழுதி இருப்பதாவது:-

கோவேக்சின் தடுப்பூசியின் வெற்றிக் கதை நாயகர்கள் மனிதர்கள் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு உயிர் காக்கிற இந்த தடுப்பூசியை கோடிக்கணக்கானோர் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு 20 குரங்குகளும்கூட பொறுப்பு ஆகின்றன.

இந்த தடுப்பூசி சிறிய அளவிலான விலங்குகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அடுத்து, மனிதர்களுடன் ஒப்பிடுகிறபோது, அதே போன்ற உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு அமைப்புகளை கொண்டுள்ள குரங்குகள் போன்ற பெரிய விலங்குகளிடம் சோதிக்க வேண்டிய கட்டம் வந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .