2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குற்றம் சுமத்துகிறது எதிர்க்கட்சி!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 09 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

''தமிழக அரசாங்கம் சரியான முறையில் திட்டமிடாததால், சென்னை மாநகரமே வெள்ளக்காடாகியுள்ளது. இனியாவது அரசாங்கம் விழித்து, போர்க்கால அடிப்படையில், தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கினார். பின், அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது,

ஜெயலலிதா அரசாங்கம், வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் முன், தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்தது. மழை பெய்ததும் தண்ணீரை அகற்றியது. திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் சரியாக திட்டமிடாததால், கனமழையில் சென்னை மாநகரமே வெள்ளக்காடாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது.

இப்போதே இந்த நிலை என்றால், இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மழை இருக்கும். 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டும், அரசாங்கம் மெத்தனமாக இருந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் வள்ளியம்மை கார்டன் பகுதியில், முழங்கால் அளவுக்கு தண்ணீர் உள்ளது. எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை; உணவு கிடைக்கவில்லை; குடிநீர், மின்சாரம் இல்லை. மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

 இன்னும் கனமழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து, விளம்பரத்துக்கு முன்னுரிமை அளிக்கிறார்; மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க முன்னுரிமை அளிக்கவில்லை. திட்டங்களை செயல்படுத்தி விளம்பரம் செய்தால் ஏற்கலாம். திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பரம் செய்து கொள்வது வேதனை அளிக்கிறது.இவ்வாறு பழனிசாமி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .