2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’குற்றவாளியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார்’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி:

லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பிரதமர் மோடி பாதுகாத்து வருவதாக பிரியங்கா டுவீட் செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கில் தனிப்பட்ட விசாரணை ஆணைக்குழு அமைப்பது ஏற்றது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசை குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் ஆகியோருக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரியங்கா மேலும் கூறியுள்ளார்.  முன்னதாக இந்த வழக்கு குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 3ஆம் திகதி லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த கார் மோதல் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து இதனை விசாரிக்க தனி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

தற்போது இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, 'உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம் விவசாயிகளை படுகொலை செய்த கொலையாளிகளுக்கு ஆதரவாக நிற்பது தெளிவாக தெரிகிறது என்று ஹிந்தியில் பதிவேற்றியுள்ளார். அஜய் மிஸ்ராவை பிரதமர் மோடி பாதுகாத்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .