2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

குளிக்காத கணவன்; விவாகரத்து கேட்ட மனைவி

Freelancer   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேசத்தில் திருமணமான வெறும் 44 நாட்களில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணின் புகாரை கேட்டு பொலிஸார் திகைத்து போயினர்.

ஆக்ராவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் செயலால் அதிருப்தியடைந்து, பொலிஸில் வரதட்சணை சித்ரவதை புகார் அளித்ததுடன், விவாகரத்து கேட்டும் முறையிட்டுள்ளார். அப்போது, சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையில் விவாகரத்துக்கு காரணம் வரதட்சணை கொடுமையல்ல. அதை விடவும் பெரிய கொடுமையான விஷயம் என தெரிய வந்துள்ளது.

தனது கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், தினமும் குளித்து சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை அவர் ஏற்க மறுப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டு, தூய்மையடைந்து விட்டதாகவும், திருமணமான 40 நாட்களில் வெறும் 6 முறைதான் அவர் குளித்திருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை குடும்பல நல ஆலோசனை மையத்தில் ஒரு வாரம் கவுன்சிலிங் பெற பொலிஸார் அனுப்பி வைத்தனர்.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X