Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவண்ணாமலையில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததையடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இது பற்றி மேலும் தெரியவருகையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஜோதிலட்சுமி தம்பதியினரின் 6 வயது மகளான காவியா ஸ்ரீ, நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள கடையொன்றில் பத்து ரூபாய் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி மூச்சுத்திணறி, மூக்கிலும் வாயிலும் நுரை வந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும் இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இறந்த சிறுமியின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் சிறுமி அருந்திய அந்த குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
8 hours ago
8 hours ago
07 Jul 2025