2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

குழந்தையின் உயிரைப் பறித்த ‘ஏசி‘

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வயதான குழந்தையொன்றின் உயிரை வீட்டில் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டி ( ஏசி) பறித்த சோக சம்பவம் நேற்று முன்தினம் சென்னை, பல்லாவரத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று அக் குழந்தையின் தாய் அக்குழந்தையைப்  படுக்கையறையில் உறங்க வைத்துவிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து பூமாலை கட்டிக் கொண்டு இருந்ததாகவும், இதன் போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பரபல்  ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து வீடு முழுவதும் தீ பரவியதால் குழந்தையை மீட்க முடியாமல் தாய் தடுமாறியதாகவும், அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதாகவும்,  எனினும் குழந்தை  தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டியில்  ஏற்பட்ட மின்கசிவே இத் தீவிபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X