A.K.M. Ramzy / 2021 மார்ச் 04 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவின் அணுகுமுறை காரணமாக பழைய மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் திமுக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2016 படுதோல்விக்குப்பின் திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவை மறு பரிசீலனை செய்த மக்கள் நலக்கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் கூட்டியக்கங்கள் மூலம் திமுகவுடன் மீண்டும் ஒன்றிணைந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை விசாரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையை ஏற்கிறேன், அவரை முதல்வராக்கியே தீருவேன் என வைகோ திமுகவுடன் இணைந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனும் திமுக அணியில் இணைந்தார். இதனால் திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக மக்கள் இயக்கமாக மாறியது. ஸ்டாலின் தலைமையை அனைவரும் அங்கீகரித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் கூட்டியக்கமாகப் பங்கேற்றனர்.
திமுக கூட்டணி அல்ல திமுக தோழமைக்கட்சிகள் அணி என அழைக்கப்பட்டது. சிஏஏ போராட்டம், வேளாண் சட்டம், புதிய கல்விக்கொள்கை, நீட் மருத்துவத் தேர்வு, இந்தித் திணிப்பு என மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஓரணியாக ஒரே குரலாக ஓங்கி ஒலித்தது திமுக தோழமைக்கட்சிகள் குரல்.
அதே அணி மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டது. பெருவெற்றி பெற்றது. கூட்டணி என்பதைத்தாண்டி தோழமையுடன் இருந்தக்கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வந்த நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையில் மாறுபட்டு பிரிந்து நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில மாதங்களாகவே திமுக 180 தொகுதிகளுக்கு மேல்தான் நிற்கப்போகிறது,
கூட்டணிக் கட்சிகளுக்கு 'சிங்கிள் டிஜிட்' என ஊடகங்களில் வந்தபோது ஏதாவது செய்தி வரும் அதெல்லாம் உண்மையாக இருக்காது என்று இருந்த கூட்டணிக்கட்சிகள் கடந்த 2 நாட்கள் நடந்த சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன.
காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் என்று அதிர்ச்சி கொடுத்த திமுக அதிகப்பட்சமாக 18இக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூறியதால் காங்கிரஸ் தரப்பு அடுத்து என்ன செய்வது என நாளை ஆலோசிக்கிறது. இடதுசாரிகளுக்கு 6 தொகுதிகள் அதிகப்பட்சம், மதிமுகவுக்கு 7 அல்லது 8 என்று அறிவித்து அடுத்து அழைக்கிறோம் என அறிவித்து விட்டு இதுவரை மீண்டும் அழைக்காததால் அவர்கள் தரப்பு என்ன செய்வதென்று யோசிக்க முடிவாக இடதுசாரி கட்சிகள் கூட்டாகக் கலந்துப் பேசியுள்ளனர்.
பின்னர் வைகோவை தொடர்புக் கொண்ட இடதுசாரி தலைவர்கள் இதுகுறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொகுதி உடன்பாடு முடிந்தநிலையில் அறிவாலயம் செல்வதை தவிர்த்து திருமாவளவனும் இந்த அணியில் சேர ஒட்டுமொத்தமாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஓரணியில் திமுகவுக்கு எதிராக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago