2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

Freelancer   / 2023 நவம்பர் 16 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரகாண்ட் மாநிலத்தின்  இமயமலையில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் . குளிர்காலத்தில் இந்த கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.

இந் நிலையில், கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளது.

இந் நிகழ்வின்  போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக  கேதார்நாத் கோவில் தலைவர்  தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிலின்  நடை சாத்தப்பட்ட பிறகு  கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் ,உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும் என  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X