2025 மே 03, சனிக்கிழமை

கேரள செவிலிக்கு ஏமனில் மரண தண்டனை

Freelancer   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி நிமிஷா பிரியா, கடந்த 2017ஆம் ஆண்டு, அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஊ

அந்தச் செவிலியின் தாய் தன் மகளை மீட்க ஒரு நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், செவிலி நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிமிஷாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சுவெளியிட்டுள்ள அறிக்கையில், “நிமிஷா பிரியாவை மீட்க குடும்பத்தினர் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று அறிவோம். அரசாங்கம் இவ்விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X