A.K.M. Ramzy / 2020 நவம்பர் 12 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவனந்தபுரம் :
கேரளாவில் ஊரடங்கு காலங்களில் சுமார் 2,868 குடும்ப வன்முறை தொடர்பான முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியு ள்ளன.
கேரளாவில் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரை சுமார் 2,800 க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை அதிகரித்து ள்ளதாக கேரள பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், கேரளாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த மாதம் 31ஆம் திகதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,868 வீட்டு வன்முறை புகார்கள் பதிவாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .