A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள;
கேரள மாநிலத்தில் , புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று திருச்சூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
குருவாயூர் தேவஸம்போர்டில் பணியாற்றும் 153 ஊழியர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட ஆன்ட்டிஜென் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதையடுத்து, கோவிலை மூடும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
குருவாயூர் தேவஸம் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் நேற்று இரவு திடீரென அவசரமாகக் கூடியது. இந்த கூட்டத்தில்தான் கோவிலை 2 வாரங்களுக்கு மூடுவது, பக்தர்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் வியாழக்கிழமை 393 பேரும் நேற்று 272 பேரும் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago