2026 மார்ச் 09, திங்கட்கிழமை

கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் ராகுல்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்குச் சென்றுள்ளார்.

திங்கள்கிழமை காலை தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்ற அவர், அன்று பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

நடைபெற்ற கொரோனா பாதிப்பு தொடர்பான  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து, இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றார். வயநாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த தடுப்புப்

பணிகள் உள்ளிட்ட நடவடிக் கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நாளை மனந்தவாடி அரசு மருத்துவமனையை பார்வையிடும் ராகுல் காந்தி, நாளை மாலை அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .