A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
அடுத்தாண்டு முதல் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: உடல்நலமே நமது சொத்து என்பதை 2020ஆம் ஆண்டு நமக்கு பாடம் கற்று கொடுத்துள்ளது. அந்த ஆண்டு, கடும் சவால் நிறைந்ததாக இருந்தது.
2020ஆம் ஆண்டிற்கு வழியனுப்பும் நேரத்தில், இந்த ஆண்டின் சவால்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்கான முக்கியத்துவத்தை நமக்கு எடுத்து காட்டியுள்ளது. ஒருவருக்கு உடலில் ஏற்படும் காயமானது, அவரின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் பாதிக்கிறது.
தற்போது, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்தாண்டு முதல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அமலுக்கு வருகிறது.
உலக சுகாதாரத்தில், முக்கிய மையமாக இந்தியா மாறி வருகிறது. 2021ஆம் ஆண்டில், சுகாதாரத்தில், இந்தியாவன் பங்கை அதிகரிக்க வேண்டும்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026