2026 மார்ச் 07, சனிக்கிழமை

கொரோனா வைரஸால் பாதிப்பு; முன்னாள் மத்திய அமைச்சர் மரணம்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

கொரோனா வைரஸால்   பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர்களில் திலீப் காந்தியும் ஒருவர். இவர் பாஜக சார்பில் போட்டி யிட்டு 1999 ஆம் ஆண்டு அகமத்நகர் மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்றார். 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கப்பல் துறையில் இவர் மத்திய அமைச்சராக செயல்பட்டார்.  

 முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .