A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
ஊரடங்கு முடிந்து விடலாம். ஆனால், கொரோனா வைரசானது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய விசயம்.
இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் கடந்த 7 முதல் 8 மாதங்களில் இந்தியா ஒரு நிலையான சூழ்நிலையில் உள்ளது.
அது வீழ்ந்து போக நாம் விட்டு விட கூடாது எனவும் தெரிவித்தார்.
நாட்டில் குணமடைந்தோர் விகிதம் நல்ல முறையில் உள்ளது. உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு.
இந்தியாவில் 10 இலட்சம் மக்கள் தொகையில் 5,500 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அமெரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரம் ஆக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதேபோன்று, உயிரிழப்பு விகிதத்தை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் 10 இலட்சம் மக்கள் தொகையில் 83 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவே அமெரிக்கா,
பிரேசில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 600க்கும் கூடுதலாக உள்ளது என்றும் கூறினார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago