2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.50,000

Freelancer   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து மாநில அரசுகளும் தங்களது மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதில் மத்திய அரசு தயக்கம் காட்டியதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இதனையடுத்தே மத்திய அரசின் உள்துறை துணைச் செயலாளர் ஆசீஷ்குமார் சிங் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். 

தொற்று பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து மரணித்த அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .