2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கொரோனாவுக்கு பின் ’நோரோ வைரஸ்’ புதிய அச்சுறுத்தல்!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 23 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா

கொரோனா தாக்குதலில் நிலை குலைந்துபோன கேரளா சற்றே நிமிர்ந்துவரும் தருணத்தில்,தற்போது ‘நோரோ வைரஸ்’ (Norovirus) எனும் பெயரில் ஒரு புதிய அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. அங்கு வயநாடு மாவட்டத்தில் பூக்கோடு கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 13 பேருக்குத் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு செய்த பரிசோதனையில் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியானது. கொரோனா, நிபா, ஸிகா என கேரளாவை மிரட்டிவரும் பலதரப்பட்ட வைரஸ்கள் வரிசையில் இப்போது புதிதாக நோரோ வைரஸ் இணைந்துள்ளது.

 நோரோ வைரஸ் விலங்குகள் மூலம் மக்களுக்குப் பரவும் வைரஸ். தமிழ்நாட்டில், மழைக்காலங்களில் குழந்தைகளின் குடலைக் கெடுக்கும் 'ரோட்டா வைரஸ்' போன்றதொரு வைரஸ் எனச் சொல்லலாம். ஆனாலும், இது மக்களுக்குப் பரவும் வேகமும் விகிதமும் ரோட்டா வைரஸைவிடப் பல மடங்கு அதிகம். கைச் சுத்தம் காத்தால் இதனிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனாலும், தரமற்ற கைச்சுத்திகரிப்பான்களுக்கு இது கட்டுப்படாமல் தப்பிவிடும். அதிலும், சமீபத்திய கனமழையைத் தொடர்ந்து குண்டும் குழியுமாகிப்போன இடங்களில் தேங்கியிருக்கும் அசுத்தங்களில் நோரோ வைரஸ் வளமாகக் குடித்தனம் நடத்தும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .