2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கொரோனாவை ஒழிக்கும் வேப்ப மரத்தின் சாறு : ஆராய்ச்சியில் முடிவு

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேப்ப மர பட்டை சாற்றை விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், அதில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஓர் ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
 தற்போதைய ஆராய்ச்சி, வேப்ப மரப்பட்டையின் கூறுகள், பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கும் என தெரிய வந்துள்ளது. இது சார்ஸ் கோவ்-2 உட்பட வளர்ந்து வரும் கொரோனா வைரஸ்களின் மாறுபாடுகளுக்கு எதிராக வைரஸ் தடுப்பு மருந்தாக செயற்படுகிற திறனைக் காட்டுகிறது.

 வேப்ப மரப்பட்டை சாறு பல்வேறு இடங்களில் உள்ள கொரோனா வைரஸின் பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் நுழைவை தடுக்கிறது.

வேப்ப மர பட்டை சாறு, கொலராடோ பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் மரிய நாகல் ஆய்வுக்கூடத்தில், கொரோனா பாதித்தவரின் நுரையீரல் செல்களில் செலுத்தியும் பரிசோதிக்கப்பட்டது. இதில், கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் எனத் தெரிய வந்துள்ளது. நோய் தொற்றுக்கு பிறகும் கூட வைரஸ் நகல் எடுப்பதையும், பரவலையும் குறைக்கிறது.

ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், வேப்ப மர பட்டை சாற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை கண்டறிவதாகும்.   கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சைகளுக்கு, இந்தக் கண்டுபிடிப்புகள் வழிகாட்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .