2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 மார்ச் 14 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாவடா - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில்  நேற்றைய தினம் (13)  ஆறு பேரை ஏற்றிக் கொண்டு பயணித்து கார் ஒன்றே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து  கால்வாயில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 6 மாத குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடெம் பகுதியில் நடைபெறும் விழாவொன்றுக்காக சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .