2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கோர விபத்தில் மணமகன் உட்பட 9 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார் ஒன்று  ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ராஜஸ்தான் மாநிலம், சௌத் கா பர்வாடாவிலிருந்து இன்றைய  தினம் (20) காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட 9 பேர் சென்றுகொண்டிருந்த நிலையில், குறித்த காரானது  வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X