2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

கோர விபத்தை ஏற்படுத்திய மின்சார பேருந்து

Freelancer   / 2022 ஜனவரி 31 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதிக்கு அருகே மின்சார பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகமாக வந்த குறித்த பேருந்தின் சாரதி தலைமறைவாகிய நிலையில், அவரை தேடும் பணி தொடர்வதாக கிழக்கு கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்தார். 

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .