A.K.M. Ramzy / 2021 ஜனவரி 14 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
கோழிகளை பண்ணைகளில் வைத்திருப்பதற்கும், கோழி இறைச்சிகளை விற்பதற்கும்; கடைகள், உணவகங்களில் பதப்படுத்தி வைப்பதற்கும் வடக்கு டில்லி மாநாகராட்சிகள் தடை விதித்துள்ளன. தலைநகர் டில்லியில் பறவைக்காய்ச்சல் நோய் பரவலாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல உணவகங்கள், ஹோட்டல்களில் கோழி முட்டை மற்றும் இறைச்சியை பதப்படுத்தி வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு, வடக்கு, தெற்கு டில்லி மாநாகராட்சிகள் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளன.
டில்லியில் காக்கைகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது அவற்றின் மாதிரிகளைச் சோதனை செய்த போது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வெளியிடங்களிலிருந்து பதப்படுப்பட்ட மற்றும் பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் கோழி இறைச்சிகளை டில்லிக்கு கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
8 hours ago
9 hours ago