2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

செக்ஸ் தொல்லைக்கு 60 ஆண்டு சிறை

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பன்னிவிழா பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது43) இவர் கடந்த 2020-ம் ஆண்டு, வாடகைக்கு வீடு பார்த்து தங்கவைத்த ஒரு பெண்ணின் மகனான 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பான புகாரின்பேரில் பிரகாஷ்குமாரை அடூர் பொலிஸார் கைது செய்தனர். அந்த வழக்கு விசாரணை அடூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.    இந்தநிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ்குமாருக்கு இயற்கைக்கு மாறான உறவு வைத்தல், போக்சோ, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சமீர்தான் தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X