A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவின் விடுதலை தொடர்பான விவாதங்கள், தமிழக அரசியல் களத்தில் பெரிதாக கிளம்பியுள்ளன.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ள நிலையில்,
தன்னைப் பற்றி தகவல்களை மூன்றாம் நபரிடம் வெளியிட வேண்டாம் என்று சசிகலா கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, அபராதத் தொகையை செலுத்துவதற்காக சசிகலா தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஆனாலும், அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளிலும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் இறங்கியுள்ளார்.
கர்நாடக சிறை விதிகளின்படி, செப்டம்பர் இறுதியில் சசிகலா வெளியே வந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறையே முடிவெடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு அது நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago