A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
சென்னை திரும்பிய சசிகலாவிடம் நேரடியாக பொலிஸ் குற்றப் பத்திரிகை அளித்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பெங்களூரு மருத்துவமனையிலிருந்து ஓய்வெடுக்க விடுதிக்கு திரும்பிய சசிகலா அதிமுக கொடியை தனது காரில் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர்கள், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.
சசிகலாவை வரவேற்க வரும் வழி எங்கும் அமமுகவினர் பொலிஸ் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதேப்போன்று அவரை வரவேற்பதற்காக அமமுக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன் பொலிஸிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதை பரிசீலித்த பொலிஸார் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர். இதுதொடர்பான குற்றப் பத்திரிகை, அனுமதி கோரிய அறிவழகனிடம் கொடுக்காமல், தமிழக எல்லைக்குள் வந்த சசிகாலாவிடம் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணன் கொடுத்தார்.அறிவழகன் அளித்த விண்ணப்பத்தின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் கொடுக்காமல், சசிகலாவிடம் கொடுத்ததால் அவரை வரவேற்க திரண்டிருந்த தொண்டர்கள் இடையே பதற்ற நிலையை உருவாகியதால், பொலிஸ் விதிகளை மீதிய டி.எஸ்.பி. சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago