2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

சசிகலாவின் வருகை அதிமுகவுக்கு இடியாகும்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைக்கால்

சசிகலா வெளியில் வந்தது குறித்து அதிகமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர்தான் (அதிமுக) பயம் கொண்டுள்ளனர். ஆளும் அதிமுக அரசுக்கு இது ஒர் இடியாகத்தான் விழுந்துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முகல்லா ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்றபின் காதர் மொய்தீன் செய்தியாளர் களிடம் கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ;

"புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முதல்வர் வி.நாராயணசாமியிடம் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.

மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல சட்டங்களைக் கொண்டுவந்து குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை அவமதிக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்தைத் தடுப்பதாகக் கூறி காதல் திருமணங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றி வருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது.

நாட்டில் ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சமய சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரிக்கு மட்டுமல்லாது அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் தனி மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்  காதர் மொய்தீன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .