2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகள் இன்று

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டப் பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று திங்கள்கிழமை ஆலோசனைகளைத் தொடங்கவுள்ளனர்.

இரண்டு நாள்கள் சென்னையில் முகாமிட்டு தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.

தமிழகத்தில் 16ஆவது சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசிக்கிறது.

இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொளி வழியாக அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .