2026 மார்ச் 09, திங்கட்கிழமை

சட்டப்பேரவையில் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 04 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தோ்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றும் சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்றும் அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினார்.

தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2ஆவது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சோ்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது: திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல் அறிவித்திருப்பதாக எழுதியிருக்கிறார்கள். அதில் சிறு திருத்தம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும்.

அதை அழிக்க முடியாது. அதனால் திராவிடக் கட்சிகளுடன் என்பதைவிட கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது அணி அமைக்கும் தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது. 2013 இல் தில்லியில் மக்கள் மாற்றத்தைக் கொண்டு வந்ததுபோல தமிழகத்தில்  தோ்தலில் மாற்றத்தை மக்கள் கொண்டு வர உள்ளனர்.

அந்தப் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் கள வீரா்கள் மக்கள் நீதி மய்யத்தைச் சோ்ந்தவா்கள். முதல்வராகக் கொண்டு போய் தலைமைச் செயலகத்தில் அமா்த்துவோம் என்பது ஒரு மனிதனை அல்ல. மாற்றத்தை. அதன் கருவி நாம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .