2026 மார்ச் 09, திங்கட்கிழமை

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒன்லைன் பதிவு தொடக்கம்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 01 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபரிமலை,

சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை 01ஆம் திகதி அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஒன்லைன் பதிவு இன்று (நவ.,1) முதல் ஆரம்பமாகிறது. சபரிமலை செல்பவர்கள், நவ.,14 வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஒன்லைன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்படு வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில்  முன்பதிவு செய்து கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .