Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 22 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை;
சபரிமலையில் இருந்து பக்தர்களை அகற்ற கூட்டு முயற்சி நடக்கிறது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும், என கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறினார்.
நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றி ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், வேதனை ஏற்படுத்தியும் அவர்களை சபரிமலையில் இருந்து அகற்றி நிறுத்த பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசாங்கமும், தேவசம்போர்டும் சேர்ந்து முயற்சி செய்கிறது. ஹலால் சர்க்கரை கொண்டு வந்ததும், தீர்த்ததை வாங்கிய அமைச்சர் அதை அவமரியாதை செய்ததும் பக்தர்களை வேதனை படுத்த திட்டமிட்டு செய்தது.
நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட செய்யப்படவில்லை. பக்தர்களுக்கு தேவையான பஸ்கள் இல்லை. உணவு சாப்பிடவும், தங்கி ஓய்வு எடுக்கவும் வசதிகள் இல்லை. விருச்சுவல் கியூ என்ற பெயரில் பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு முடிந்த அளவு சிரமம் கொடுக்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர். எவரையும் சபரிமலை வராமல் இருக்க செய்யும் தந்திரமாகதான் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்ந்தால் பாரதிய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியுள்ளார்.
9 minute ago
35 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
35 minute ago
38 minute ago
48 minute ago