2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

சம்பளம் கேட்ட ஊழியரை பெட்ரோல் ஊற்றி எரித்த நிறுவனம்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பளம் தருமாறு கேட்ட உழியரை முதலாளியொருவர்    பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தெற்குமாசி வீதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். 76 வயதான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு அவருக்கு கடந்த 2 மாதமாகச்  சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் அந்நிறுவன உரிமையாளர் திலிப்குமார் மற்றும் நிறுவன அதிகாரி ஜோன் ஆகியோரைத்  தொடர்பு கொண்டு சம்பளம் வழங்கும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் இருவரும் ரத்தினவேலை ஆள் அரவமற்ற இடமொன்றிற்கு அழைத்துச் சென்று ”உங்களின் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை அனுப்பி விட்டோம். ஏ.டி.எம். எந்திரத்தில் சம்பள பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை நம்ப மறுத்த  ரத்தினவேல், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த திலிப்குமார், ஜோன் ஆகியோர் ரத்தினவேலை சரமாரியாக தாக்கியுள்ளதோடு, அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீவைத்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரத்தினவேலின் அலறல் சத்தம் கேட்டு  அங்கு வந்த பொதுமக்கள், தீயை அணைத்து அவரை வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும், எனினும்  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன்  திலிப்குமார், ஜோன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X