2025 மே 10, சனிக்கிழமை

சர்ச்சையை கிளப்பிய முதியவர்

Mayu   / 2023 டிசெம்பர் 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முடிவுக்கு வரும்போது அயோத்தி இராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் பேசிய காணொளியொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 2024 ஜனவரி மாதம் 22ம் திகதி திறக்கப்பட உள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறநிலையில் விழாவில் 3 ஆயிரம் விருந்தினர்கள் சேர்ந்த வெளிநாடு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்

இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி இராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் பேசும் காணொளி வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஊடகவியலாளர் ஒருவர் முதியவரிடம் இராமர் கோவில் குறித்த கேள்வியை கேட்டபோது: அதற்கு அந்த முதியவர், ‛‛இராமர் கோவில் கட்டி வழிபடுங்கள். ஆனால் மோடி, யோகி இல்லாத நாளில் இராமர் கோவிலை இடித்து தள்ளுவோம். மீண்டும் பாபர் மசூதி கட்டப்படும்'' என தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X